கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்த வடமாநில தம்பதி 3 குழந்தைகளுடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான் அன்சாரி - சல்மா காத்தூண் தம்பதி, 6 மாதங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. இடையில் ஊருக்கு சென்று 15 நாட்களுக்கு முன் மீண்டும் வந்தவர்கள் இன்று காலை அறையில் மயங்கி கிடந்தனர். அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் 10 வயது சிறுவன் அயன் உயிரிழந்தது தெரியவந்த நிலையில், மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.