மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழுதடைந்த குடிசையில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு, நண்பர்கள் உதவியுடன் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக் கொடுத்த சமூக சேவகர், திறப்பு விழாவை ஒட்டி புத்தாடை மற்றும் மளிகை பொருட்களையும் வழங்கினார். செம்பியன் வேலங்குடி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளான காசிஅம்மாள், அவரது மகன் மதியழகன் ஆகியோர், இடிந்து விழும் நிலையில் இருந்த குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இதனை அறிந்த பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டி ஒப்படைத்தார். திறப்பு விழாவில் 10க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.