திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அய்யப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் தங்கியுள்ள பாழடைந்த பள்ளி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 70 தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வரும் நிலையில், இந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கியுள்ள பகுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.