விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் வழங்கப்பட்ட புடவைகளை வாங்க முண்டியடித்தபோது, மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.