தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் குடும்பம் குடும்பமாக குவிந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் தடுப்புச் சுவரை பிடித்து இறங்கி நீராடினர். கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக விநாடிக்கு 20 ஆயிரத்து 378 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணையில் தண்ணீர் ஆர்பரித்துச் சென்றது. இதனால் அணையில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் தடுப்புச் சுவரை பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் கடந்து சென்று குளித்தனர்.இதையும் படியுங்கள் : ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏலகிரியில் ஒருநாள் கோடை விழா... அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்தனர்