சென்னையில் RAPIDO ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேலாபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் RAPIDO ஓட்டுநராக உள்ளார். இவரது காரை மணலியை சேர்ந்த பெண் ஒருவர் புக் செய்த நிலையில், அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அப்பெண்ணின் கணவர் ராஜி மற்றும் நண்பரை ஏற்றி சென்றார். அப்போது, எருக்கஞ்சேரி அருகே வந்தபோது, ஓட்டுநரை பலமாக தாக்கிவிட்டு 2,700 ரூபாய் பணத்தை இருவரும் பறித்து சென்றனர். இது குறித்து வினோத்குமார் புகார் அளிக்கவே, செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அவர்கள் வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த ராஜி மற்றும் அவரது நண்பர் கலை என்பது தெரிய வந்தது. அதில் கலையை போலீசார் தேடி வருகின்றனர்.