தூத்துக்குடி முத்தரையர் நகர் வடக்கு பகுதியில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் படகில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தபோது, நள்ளிரவில் திடீரென தீப்பற்றியது. இந்நிலையில் மர்மநபர்கள் யாரேனும் படகிற்கு தீ வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.