கடலூர் மாவட்டம் ரெட்டா குறிச்சி கிராமத்தில் மின் கசிவால் கூரை வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிசை தீப்பற்றியதைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேற, தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர்,தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.