கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய காவல்துறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழக காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக மாநிலத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.