விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி கிராமத்தில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதால், அதில் வசிக்கும் அருந்ததியர் இன மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் தண்ணீரே வருவதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.