செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் கை கருகியது. தனியார் கல்லூரியில் பயின்று வரும் இஷால் கண்ணா தனது நண்பர் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று விட்டு திரும்பும் போது படிக்கட்டில் வழுக்கி விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கை மின்சார கம்பியில் உரசி இடது கை முழுவதுமாக கருகியது.