திருச்சி அருகே, மணப்பாறையில் ஓடும் ரயிலில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான நிலையில், அவரது உடல் சிறிது தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 வயதான சேக் அப்துல்லா என்ற அந்த மாணவன், ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, தடுமாறி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்தார்.