மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலையில் சென்ற இருசக்கரவாகனம் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில், அதில் பெற்றோருடன் பயணித்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், தனது மனைவி ஹேமலதா மற்றும் 2 வயது பெண் குழந்தை ஜஸ்டிகாவுடன் இருசக்கர வாகனத்தில் வாடிப்பட்டி சென்றார்.