நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய கடலூர் வந்துள்ள மத்திய குழுவினர், தூக்கணாம்பாக்கம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நேரடியாக ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்தனர். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நெல்லின் ஈரப்பத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று, தமிழக அரசு, மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று, நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு செய்ய மத்திய குழு, தமிழகம் வருகை தந்துள்ளது. கடலூரில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததோடு, அதற்கு உடனடி தீர்வு காண மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். மத்திய தானியங்கள் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவி இயக்குனர் ப்ரீத்தி தலைமையில், மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். மத்திய குழுவினர் குறைகளை கேட்டபோது, தங்களது பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அமர்வதற்கு இடம் இல்லை, அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை இல்லை என்று, விவசாயிகள் கூறினர். உடனே, மாவட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மத்தியக்குழு கூறியது.இதையும் பாருங்கள்... நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு.. ஈரப்பத அளவை உயர்த்த கோரிக்கை | Cuddalore