இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சல்லிமலையில் இருந்து கெந்தமாதன பர்வதம், காட்டு பிள்ளையார் கோவில் பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சிமெண்ட் சாலை சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் இச்சாலையில், மின்விளக்குகளும் இல்லாத நிலையில், இரவு நேரத்தில் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்