மதுரை அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 4 மாதங்கள் ஆகியும் போலீசார் துப்பு துலக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் கடந்த மே மாதம் 11 ம் தேதி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 250 சவரன் தங்க நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் தேடப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி 4 மாதங்கள் ஆகியும், போலீசார் வழக்கின் உண்மைத் தன்மையை கண்டறிய ஆர்வம் காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.