கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்களிடம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூரில் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து, தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று வேலுச்சாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு உதவி ஆய்வாளர், 2 எஸ்.எஸ்.ஐ.க்கள் சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜரானார்கள். இதுவரை 7 உதவி ஆய்வாளர்கள், 12 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.