வாகன விபத்து தொடர்பாக மதமோதலை தூண்டும் வகையில் தவறான தகவல்களை பரப்பிய வழக்கு தொடர்பாக, மதுரை ஆதீனத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீஸார் இரண்டாவது முறையாக நேரில் சென்று விசாரணை நடத்தினர். கடந்த மே மாதம் 2 ஆம் தேதி உளுந்தூர் பேட்டை பகுதியில் மற்றொரு கார் தன் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாகவும், மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் குறிப்பாக குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள் கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். தகவறான தகவல் பரப்பியதாக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இரண்டாம் கட்டமாக மதுரை ஆதீனத்திடம் 20 நிமிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்தனர்.