தேனியில் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர்- பரமேஸ்வரி தம்பதிக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.குடிபோதைக்கு அடிமையான சங்கர், தனது குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு சிவக்குமார்- உமா மகேஸ்வரி தம்பதியிடம் விற்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையின் தந்தை சங்கர் மற்றும் சிவக்குமார் – உமா மகேஸ்வரி தம்பதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த நிலையில், சிறையிலும் அடைத்தனர்.