ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், மேலும் இருவரை கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிப்காட் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.