கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 5 பேருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ராம்பாக்கம் கிராமத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை, அதேபகுதியை சேர்ந்த தினேஷ் என்கிற தீபன், வினோத்குமார், பாபு , பிரதீப் ராஜ், ரஜினி சுமன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்.