கோவையில், இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கபாண்டியனின் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயதான இளம் பெண், கோவையில் தங்கி தனியார் நிறுனத்தில் வேலை செய்து வரும் நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த் தருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 2 ஆம் தேதி நேரில் சந்தித்தனர். நவக்கரை அருகேயுள்ள குளக்கரையில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர், தருணுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி 3 சவரன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து, புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பணம், நகை பறித்த தருண், திண்டுக்கல்லில் பணியாற்றி வரும் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கப்பாண்டியின் மகன் எனத் தெரிய வந்தது. இதை அடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக தருணை கைது செய்தனர். இதையும் பாருங்கள் - பெண்ணை மிரட்டி நகைபறிப்பு DSP மகன் கைது | Coimbatore | jewellery theft | arrest | DSP News