பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிர்வாக அலுவலருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013- ஆம் ஆண்டில், பெரிய மஞ்சுவெளி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கிராம நிர்வாக அலுவலர் கதிரேசனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.