சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு வேன் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. அரும்பாக்கம் பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற சரக்கு வேன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நியூட்டன் வளைவை கடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மீது மோதியது. இதில் சரக்கு வேனின் முன்புறத்தில் ஏற்பட்ட டீசல் கசிவால் வேன் தீப்பற்றி எரிந்த நிலையில், டாரஸ் லாரி நிற்காமல் தப்பிச் சென்றது. இதில் சரக்கு வேனை ஓட்டி வந்த கமலக்கண்ணன் உடனடியாக வேனை விட்டு இறங்கி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்த நிலையில் வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.