கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே கார் மோதியதில், பைக்கில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பத்துகாணியை சேர்ந்த பிரவீன் தனது பைக்கில் நண்பர்கள் இருவரை அழைத்து கொண்டு குழித்துறை நோக்கி சென்ற போது, லாரியை முந்தி செல்ல முயன்ற கார் ஒன்று பைக்கின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.