நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.கூடன்குளத்தை சேர்ந்த தனசீலன் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதோடு, எதிரே வந்த லாரி மீது மோதி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. அதில் பள்ளிச் சீருடை அணிந்த 2 மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.