தஞ்சை அருகே பாலத்தில் சென்ற கார் நிலை தடுமாறி தடுப்பு கட்டையின் மீது பலமாக மோதி சாலையில் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த சதீஷ்ரவி, தனது மகன் கலந்து கொண்ட சிலம்பம் போட்டியை காண உறவினர்கள் இருவருடன் மயிலாடுதுறை சென்றுவிட்டு வீடு திரும்பினார்.கார் தஞ்சை விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் உள்ள குருங்களூர் வெண்ணாறு பாலம் அருகே வந்தபோது நிலை தடுமாறி பாலத்தின் தடுப்புக்கட்டையின் மீது பலமாக மோதியது.இதில் கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.