சென்னை பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த பவன் என்பவர் தனது நண்பர்களுடன் வெளிநாட்டிலிருந்து வந்த மற்றொரு நண்பரை சென்னை விமானநிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு காரில் சென்றார். இந்நிலையில் காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது மின்சார வயர்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கவிழ்ந்தது. இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் நான்கு பேரை மீட்டனர். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் காரையும் மீட்டனர்.