விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். பெங்களூருவை சேர்ந்த சுமித்தி பட்டாச்சா, தனது குடும்பத்தினர் 9 பேருடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றார். புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளச்சூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. இதில், சுமித்தி பட்டாச்சா, அவரது மனைவி ஷோபா உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.