தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டையை தாண்டி சென்ற கார், எதிரே வந்த வேன் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹைதராபாத்தை சேர்ந்த கமலாபாய் என்பவர், குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு காரில் சென்று விட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த மோஹித்ராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.