சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது பயங்கரமாக மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு காவல் நிலையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதவே, பதற்றமடைந்த ஓட்டுநர் காரை வேகமாக வலதுபுறம் திருப்பியதில், டூவீலரில் வந்த பெண் மீது பயங்கரமாக மோதியது.