கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை தாண்டி எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நாயகன் பேட்டையை சேர்ந்த வீரபாண்டியன், தனது உறவினர்களான சேகர் மற்றும் சின்னதுரை ஆகியோருடன் எள்ளேரி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது கோவை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி வந்து சர்வீஸ் சாலையில் சென்ற இருசக்கரவாகனம் மீது மோதியதில் அதில் சென்ற மூவரும் வயலில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சிதம்பரத்தை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்யப்பட்டார்.