திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராங் சைடில் வந்த கார் மோதியதில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.பொங்கலூரை சேர்ந்த ரவிக்குமார், தனது மனைவி மற்றும் மகளுடன் கோவை நோக்கி இரு சக்கர வாகனத்தில் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர் திசையில் வந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.