கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பழுதாகி சாலையோரமாக நின்ற டாட்டா ஏசி வாகனம் மீது கார் மோதிய விபத்தில் காரில் வந்த மூன்று பேர் காயமடைந்தனர். அதிகாலை காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறியை ஏற்றிக்கொண்டு நெய்வேலி சென்ற டாட்டா ஏசி வாகனம் பெரிய நெசுலூர் பகுதியில் பழுதானதால் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது சேலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை கவனிக்காமல் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.