சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழராங்கியம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் ராம்பாண்டி, சக தொழிலாளி அய்யணன் என்பவருடன் மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் பின்னால் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கார் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.