திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.