ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பெண் மருத்துவர் சென்ற காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் விணு பிரியா, கோவையில் இருந்து ராமநாதபுரம் வந்து கொண்டிருந்த போது, அவரது காரும் எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.