விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.சேலம் காமராஜர் காலனியை சேர்ந்த செல்வம், அவரது நண்பரும் கேரளாவில் உள்ள பத்மநாபா சுவாமி கோவிலுக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.கார் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் அசையா மணி விளக்கு பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து கேரளா நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் செல்வம் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் படுகாயம் அடைந்தனர்.கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.