திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அதிவேகமாக சென்ற கார், சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதிவிட்டு, அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், சட்டக்கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் மோகன்தாஸ் ஓட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது.