மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத கால்வாயை ஊர் மக்கள் இணைந்து தாங்களாகவே தூர்வாரி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து 5 ஆம் எண் கிளைக் கால்வாய் மூலம் கருமாத்தூர், செட்டிகுளம், பூச்சம்பட்டி, மாயன்குரும்பன்பட்டி, வளையன்குளம் உள்ளிட்ட 5 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனிடையே இந்த கால்வாய் புதர்மண்டி கிடப்பதால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்சனையை கிராம மக்கள் இணைந்து சரி செய்துள்ளனர்.