சேலம் மாவட்டம் கதிர்செட்டிப்பட்டியில் எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாரியம்மன் கோயில் திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முப்பதிற்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகள் பங்கேற்றன. மாடுகளின் கழுத்தில் வடம் கட்டி, அதனை அங்கும் இங்கும் இழுத்து இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.