சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி பழுதாகி சாலையில் நின்றதால், ஸ்ரீபெரும்புதூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே மேம்பாலம் கட்டும் பணிக்காக வாகனங்கள் குறுகலாக உள்ள சர்வீஸ் சாலையில், திருப்பி விடப்பட்ட நிலையில், திடீரென லாரி பழுதானதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.