ஏழு ஆண்டுகளாக காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணமும் செய்து, 12 லட்சம் ரூபாய் பறித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கன்னியாகுமரியில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். கத்தார் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வரும் தேங்காப்பட்டணம் அருகே உள்ள ராமன்துறையை சேர்ந்த சுஜின், தன் பணத்தில் காதலியை ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைத்ததாக தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு கிறிஸ்தவ சபையில் திருமணம் செய்த நிலையில், தனது அக்காவுக்கு திருமணமானதும் ஒன்றாக வாழலாம் எனக் கூறி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பெங்களூருவில் வேலைக்கு சென்ற அப்பெண் பல ஆண்களுடன் பழகுவதாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் சுஜின் குற்றம் சாட்டியுள்ளார்.புதுக்கடை காவல் நிலையத்தில், திருமணம் செய்வதாக கூறி, மோசடி செய்ததாக புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, குழித்துறை நீதிமன்றத்திலும் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளார். தன் பணத்தை, வாழ்கையை இழந்து தனித்து விடப்பட்டுள்ளதாகவும், காதலியிடம் இருந்து பணத்தை மீட்டு தருவதோடு காதலி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.