திருப்பத்தூர் அருகே பள்ளிக்குச் சென்ற சிறுவனை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்! சிசிடிவி காட்சிகள் வெளியேகி பரபரப்பு! திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஹாரிப் நகர் பகுதியை சேர்ந்த தாஹித் என்பவரின் மகன் அத்திக்(7) என்ற சிறுவன் திருப்பத்தூர் 12 வது வார்டு ராஜன்தெரு பகுதியில் உள்ள உஸ்மானியா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் இன்று காலை சிறுவன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவனை துரத்தி துரத்தி கடித்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தும் பணியில் ஈடுபட்டனர் மேலும் ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்து நாயின் மீது மோதி நாயை கீழே தள்ளியதன் பின்னர் நாய் அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் அத்திக்கின் சித்தப்பா இர்பான் சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரிசைகட்டி வெறிநாய்கள் மற்றும் தெரு நாய்கள் சுற்றி திரிவதாகவும் பொது மக்கள் பலமுறை புகார் அளித்துள் நகராட்சி நிர்வாகத்தினர் மெத்தனப்போக்காக செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இதுபோல் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.