ராணிப்பேட்டை அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் வலியால் நாள்தோறும் அவதிப்பட்டு வரும் நிலையில், மேல் சிகிச்சைக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் என்பவருடைய 13 வயது மகன் சதீஷ் சாலையில் விளையாடி கொண்டிருந்த போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 10 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் செலவு செய்ய பணம் இல்லாததால் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.