பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி அருகே வீட்டு வாசலில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் டிராக்டர் மோதி பரிதாபமாக உயிரிழந்தான். ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் மகன் தர்ஷன் வீட்டு வாசலில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக ஜல்லிகளை ஏற்றிக்கொண்ட வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் சிறுவன் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தான். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் டிராக்டர் ஓட்டுநர் மாரிமுத்துவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.