திருவெற்றியூர் அண்ணாமலை நகர் வேலம்மாள் பள்ளி அருகே கழைக்கூத்தாடி குடும்பத்தினர் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 5 பேர் ஐந்து வயது சிறுவன் வளையம் மூலம் வித்தை காண்பித்துக் கொண்டிருக்கும் போது.திடீரென அந்த வழியாக வந்த கே சி பி நிறுவனத்தின் வேன் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் அஜாக்கர்தயால் சிறுவன் காலில் ஏறிய நிலையில் சிறுவனை வலது கால் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழியவே குழந்தையின் தாய் கதறி அழுத நிலையில் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஊழியர்கள் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் இதில் சிறுவனின் குடும்பத்தார் கண்ணீர் மல்க கதறி அழுத நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுவனையும் அவரது குடும்பத்தாரையும் அழைத்துச் சென்றது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் வேன் ஓட்டுனரை மடக்கிப்பிடித்து சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link பாட்டிலில் பெட்ரோல் கேட்டு போதை இளைஞர்கள் ரகளை