திருப்பூரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் வீரபாண்டி ஜெயலலிதா நகரை சேர்ந்த மூதாட்டி வீராள் என்பவர் தனது மகனுடன் நடைப்பயிற்சி சென்ற பின்னர் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனின் தந்தை ஆறுமுகத்தை வீரபாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.