திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கேரளவை சேர்ந்த முதியவர் உடல் அருகே வெடிபொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். கேரள முதியவர் இறந்து கிடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.