கும்பகோணம் அருகே மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில், படுகாயமடைந்த பாஜக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் சரண்ராஜ், இருசக்கரவாகனத்தில் கும்பகோணம் சென்றுக்கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்மகும்பல், சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது.